follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகல்வீச்சு தாக்குதலுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதுதான் ஜனநாயகமா?

கல்வீச்சு தாக்குதலுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதுதான் ஜனநாயகமா?

Published on

ரம்புக்கனை சம்பவம் ஒரு மனித படுகொலையாகும் எனவும், அதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நிலைமையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்கு பதிலடியாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களால் தாக்குதல் நடத்தியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கல்வீச்சு தாக்குதலுக்கு பொலிஸாரின் பதில் துப்பாக்கி பிரயோகமா?  என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, ரம்புக்கன சம்பவத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகள் வெட்கத்திற்கு உரியது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன விமர்சித்துள்ளார்.

தமது டுவிட்டர் பக்கத்தில் மஹேல ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறையாக செயற்பட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் பொதுமக்களை கைது செய்யாமல் அவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வதுதான் ஜனநாயகமா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், இந்த சம்பவம் தொடர்பில் பொறுப்பு கூறவேண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த துப்பாக்கி பிரயோகத்தை வன்மையாக கண்டிப்பதாக பீல்ட் மார்சல் சரத்பொன்சேக்கா தமது உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதவியேற்று 48 மணிநேரத்திற்கும் ஒரு உயிர் பறிபோயுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தெற்காசியாவுக்கான சர்வதேச மன்னிப்புச் சபைக் கிளையும் இந்த சம்பவத்தைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ரம்புக்கனை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலேயே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.

மேலும், துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் விசாரணைளை முன்னெடுப்பதற்கு மூவரடங்கிய விசாரணை குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், படையினர் மற்றும் பொலிஸார் அவதானமாக செயற்பட வேண்டும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது 30 ஆயிரம் லீற்றர் எரிபொருளைக் கொண்ட பௌசருக்கு ஒரு குழுவினர் தீ வைக்க முற்பட்டதைத் தடுக்கவும், அதனால் ஏற்படக்கூடிய பாரிய சேதங்களைத் தடுக்கவும் பொலிசார் குறைந்தபட்ச பலத்தை பிரயோகிக்க வேண்டியிருந்ததாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்கும் போது பொலிஸார் அதிக பலத்தை பிரயோகித்தனரா என்பது தொடர்பில் பொலிஸ் தலைமையக மட்ட விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவர் தற்போதைய நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒருவருக்கு சத்திரசிகிச்சை நிறைவடைந்துள்ளதாகவும், மேலும் இரண்டு பேருக்கு சத்திர சிகிச்சைகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...