follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடுஇலங்கைக்கு உதவுமாறு இந்திய நிதியமைச்சர் IMF இடம் கோரிக்கை

இலங்கைக்கு உதவுமாறு இந்திய நிதியமைச்சர் IMF இடம் கோரிக்கை

Published on

இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவுடன் இன்று வொஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இவ்வாறு இலங்கைக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

வெளிநாடுகள் மாத்திரமின்றி சர்வதேச நிறுவனங்களும் இலங்கைக்கு உதவ முன்வருவது அவசியம் என்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இலங்கை எதிர்கொண்டுள்ள கடினமான பொருளாதார நெருக்கடிகளுக்கு இந்தியா வழங்கி வரும் உதவிகள் குறித்தும் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவிற்கு , நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.

நிர்மலா சீதாராமன் கேட்டுக் கொண்டதற்கமைய , சர்வதேச நாணய நிதியம் தொடர்ந்தும் இலங்கையுடன் ஒன்றித்து செயற்படும் என்று அதன் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியா உறுதியளித்துள்ளார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய் கட்டுப்பாடு மற்றும் மார்பு நோய்களுக்கான தேசிய...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப் போன்று இடம்பெறுமென ரயில்வே பிரதி பொதுமுகாமையாளர்...