நாட்டில் சுகாதாரத் துறையை கட்டியெழுப்புவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு நிதியுதவியை வழங்கவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
நாட்டின் சுகாதாரத்துறையினை கட்டியெழுப்புவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதற்கமைய 37.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகவும், 12.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாகவும், மொத்தமாக 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கவுள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை இணை பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.