இலங்கையின் றக்பி அங்கத்துவத்தை உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஆசிய றக்பி நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளது.
இலங்கை றக்பியின் சட்டபூர்வ தன்மைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆசிய றக்பி நிறைவேற்று குழுவின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.