அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் கொழும்பு காலி முகத்திடலில் கடந்த மூன்று நாட்களாக முன்னெடுக்கப்படுகின்றது.
போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களில் சிலர், கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்கின்றனர். இந்நிலையில், அவ்வாறு கூடாரம் அமைக்கப்பட்ட பகுதிக்கு “ ‘கோட்டா கோ கிராமம்’ ” என்று பெயர் சூட்டி, அறிவித்தல் பலகையொன்றையும் நாட்டியுள்ளனர்.
குறித்த பெயரானது கூகுள் வழிகாட்டலில் உள்ளடக்கப்பட்டுள்ளமை தற்போது வைரலாகி வருகிறது