தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13, 14, 15 ஆகிய திகதிகளில் மின்வெட்டு அமுலாகாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இருப்பினும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் காலை 8 முதல் மாலை 5 மணி வரை இரண்டு மணிநேரம் 15 நிமிடங்களுக்கு மட்டும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்தார்.
இதேவேளை எரிபொருள் விநியோகம் மற்றும் நீர் மின் உற்பத்தி ஆரம்பித்துள்ளமையினால் மின்துண்டிப்பு நேரத்தில் மாற்றம் ஏற்படும் என்றும் கூறினார்