follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுகள்வர்களுடன் ஒன்றிணைந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாரில்லை : நிறைவேற்று அதிகாரத்தை நீக்கினால் ஆட்சி அமைக்க தயாா்...

கள்வர்களுடன் ஒன்றிணைந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாரில்லை : நிறைவேற்று அதிகாரத்தை நீக்கினால் ஆட்சி அமைக்க தயாா் – சஜித்

Published on

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டுமாயின் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும், அவ்வாறு ஆட்சி பொறுப்பை ஏற்க வேண்டுமெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை  முழுமையாக நீக்கப்பட வேண்டுமெனவும் எதிர் கட்சி தலைவர் சஜித் பிரேமதாச   சபையில் பகிரங்கமாக அறிவித்தாா்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிருந்து நாட்டை மீட்பதற்கான  ஐக்கிய மக்கள் முன்னணியின் சார்பில் யோசனைகளை முன்வைத்து, எதிர்க் கட்சி தலைவர் தற்போது சபையில் உரையாற்றிக்கொண்டிருக்கிறாா். இதன்போதே அவர் இதனைக் குறிப்பிட்டாா்.

20 ஆவது திருத்தச் சட்டத்தினூடாக ஜனாதிபதிக்கு சாதாரண நிறைவேற்று அதிகாரம் அல்லாமல் சிறப்பு நிறைவேற்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதனை நீக்க வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறானதொரு அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் கீழ் தற்காலிக அரசாங்கமோ இடைக்கால அரசாங்கமோ கொண்டு செல்ல முடியாது. ராஜபக்ஷக்களின் தலைமைத்துவம் அல்லது அவர்களுடன் தொடர்புடையோா் இந்த செயற்பாடுகளிலிருந்து விலகி இருப்பார்களாயின் நாம் பேச்சுவார்த்தைக்கு தயாா்.

இந்த நாட்டு மக்கள் மோசமான வகையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த பாதிப்பிலிருந்த அவர்களை துரிதமாக மீட்டெடுக்க வேண்டும் என்றாா்.

மேலும் நான் அரசியலில் இருக்கவும் தயார், ஓய்வு பெறவும் தயார் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, கள்வர்களுடன் ஒன்றிணைந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட தயாரில்லை என்றார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...