இந்தியாவின் அதானி குழுமத்தினால் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய நிர்மாணப்பணிகள் எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்கு தயாராகி வருவதாக த ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
எப்செஸ் எனப்படும் அதானி துறைமுகம், வெளிநாட்டு பொருளாதார வலைய நிறுவனம் இதற்காக இலங்கையில் உள்ள ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியவற்றுடன் இணையவுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக மேற்கு முனையத்தின் நிர்மாணப்பணிகளை அதானி குழுமத்திற்கு வழங்குவதாயின் உள்நாட்டு பங்குதாரர்களும் இணைந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்.
குறித்த துறைமுகத்தின் மேற்கு முனையத்தினை நிர்மாணித்து அதனை பராமரிப்பதற்கு 35 வருட கால பரிமாற்ற உடன்படிக்கையொன்றில் அதானி நிறுவனம் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் கையெழுத்திடும் என த ஹிந்து தெரிவித்துள்ளது.
1400 மீட்டர் நீளமும், 20 மீட்டர் ஆழமும் கொண்ட மேற்கு முனையத்தில் அதிகளவான கொள்கலன்களை கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.