ஆகஸ்ட் 27 வெள்ளிக்கிழமை வரை, நியூசிலாந்து முழுவதும் மேலும் 4 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
புதிய நீடிப்பு உத்தரவுகளுக்கு அமைவாக தேசிய ரீதியிலான முடக்கல் நிலை ஆகஸ்ட் 27 நள்ளிரவு வரையும், புதிய கொவிட்-19 வெடிப்பின் மையப் பகுதியான ஆக்லாந்தில் ஆகஸ்ட் 31 வரையும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய டெல்டா மாறுபாட்டின் கொரோனா வைரஸ் இன்னும் உச்சத்தை அடையவில்லை எனவும் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட மக்களால் சமூகத்தில் தொடர்புகள் நாடு முழுவதும் பதிவாகியுள்ளதாகவும் நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து திங்களன்று மேலும் 35 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளை பதிவுசெய்ததுடன், டெல்டா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 100 யும் கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.