இங்கிலாந்தில் நடைபெறவுள்ள தி ஹண்ட்ரட் (The Hundred) கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் சகலதுறை வீரர் வனிந்து ஹஸரங்க மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அணியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட வீரர்களிலிருந்து, வனிந்து ஹஸரங்க மாத்திரமே வீரர்கள் வரைவின் மூலம் அணியொன்றுக்காக வாங்கப்பட்டுள்ளார்.
இதில், வனிந்து ஹஸரங்க ஒரு இலட்சம் பவுண்டுகளுக்கு (3 கோடி 94 இலட்சம் இலங்கை ரூபாய்) மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது.
வனிந்து ஹஸரங்க வாங்கப்பட்டுள்ள மென்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணிக்காக மே.தீவுகளின் அதிரடி சகலதுறை வீரர் அன்ரே ரசல் 125,000 பவுண்டுகளுக்கு வாங்கப்பட்டுள்ளார்.