follow the truth

follow the truth

November, 15, 2024
Homeஉள்நாடுமிரிஹான சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியான செய்தி பொய்யானது

மிரிஹான சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக வெளியான செய்தி பொய்யானது

Published on

கடந்த வாரம் மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்து களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மையில் மிரிஹானவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்பாக பேசிய இளைஞர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

எனினும், அந்தத் தகவலில் உண்மையில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டு களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் உயிருடன் இருப்பதாகவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எவரும் உயிரிழக்கவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி - 97 ஆசனங்கள் ஐக்கிய மக்கள்...

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் கைது

2024 பொதுத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 41 பேர் இன்று (14) கைது செய்யப்பட்டதாக பிரதிப் பொலிஸ்...

தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரம் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை

2024ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (14) நிறைவடைந்துள்ள நிலையில், வாக்குப்பெட்டிகள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களுக்குச்...