சமூக ஊடஊடகங்களுக்கு தடை விதித்தமை மனித உரிமைகளை மீறும் செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
ஆணைக்குழுவின் உறுப்பினர்களினது பங்குபற்றலுடன் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சரியான மதிப்பீட்டின்றி பொது அவசரநிலையை அமுல்படுத்துவது மனித உரிமைகளை மீறும் செயலாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.