மக்கள் எதிரிகள் அல்ல, இலங்கை என்பது அதன் மக்கள். நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது, மக்களும் அவர்களின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட வேண்டும் மற்றும் வழங்கப்படும்” என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
இலங்கை கற்பனை செய்யமுடியாத கடினமான தருணத்தின் ஊடாக பயணித்து கொண்டிருப்பதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொது மக்கள் தமது நாளாந்த வாழ்கையை தொடர்ந்து செல்வதற்கு மிகவும் சிறமப்படுவதாகவும், மக்கள் தாம் எதிர்பார்க்கும் தேவையை நோக்கி குறலெழுப்பி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமது தனிபட்ட மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரலை புறந்தள்ளி மக்களின் கருத்துகளுக்கு செவிமெடுப்பதே சிறந்ந தீர்வாகுமெனவும் அவர் வழியுறுத்தியுள்ளார்
அத்துடன் மக்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.