பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்களிப்பதற்காக அந்நாட்டு பாராளுமன்றம் கூடியது. இந்நிலையில் வாக்கெடுப்பு தொடங்கும் முன்பே நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நிராகரிப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார். பாராளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான் கான் பரிந்துரைத்தார்.
பாகிஸ்தானில் பணவீக்கம் அதிகரித்து, பொருளாதார நெருக்கடி எழுந்துள்ளதனால் பிரதமர் இம்ரான் கானை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் மொத்தமுள்ள 342 பாராளுமன்ற உறுப்பினர்களில் இம்ரான் கானுக்கு 140 பாராளுமன்ற உறுப்பினர்களும், எதிர்க்கட்சிகளுக்கு 200 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று கூடியது. இதன்போது நம்பிக்கையில்லா தீர்மானம் துணை சபாநாயகரால் இரத்து செய்யப்பட்டது. இந்த தீர்மானம் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 5க்கு எதிரானது எனக்கூறி தீர்மானத்தை நிராகரித்தார்.
இதையடுத்து, ஏப்ரல் 25-ம் திகதி வரை பாகிஸ்தான் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.