ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த செல்ல முயற்சித்த போது, பொலிஸார் தடைகளை ஏற்படுத்தி அவர்களை தடுத்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச உட்பட எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுதந்திரத்தின் தந்தையான டி.எஸ்.சேனாாநாயக்கவிடம் மக்களின் குறைகளை எடுத்து கூற அனுமதி வழங்குமாறு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் பொலிஸாரிடம் கூறினர்.
இதில் சம்பிக்க ரணவக்க. ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், கபீர் ஹாசிம், மனுஷ நாணயக்கார, எஸ்.எம். மரிக்கார் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் றிசார்ட் பதியூதீன், முஜிபுர் ரஹ்மான் உட்பட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
சுதந்திர போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு செல்ல பொலிஸார் அனுமதி மறுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
அத்துடன் மக்களின் எதிர்ப்பு கண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அச்சம் கொண்டுள்ளதால், அதனை தடுக்க முயற்சித்து வருவதாகவும் ஆண்டவனே வந்தாலும் மக்களின் எழுச்சியை தடுத்து நிறுத்த முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோட்டா கோ ஹோம் என்றும் கோஷம் எழுப்பி வருகின்றனர்.