அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (ஏப்ரல் 1) முதல் அமுலாகும் வகையில் நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
‘ அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும். அரசுக்கெதிரான எதிர்பினையும் போராட்டங்களையும் இதன் மூலம் அடக்க முடியாது. இந்த தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும். அரசுக்கெதிரான எதிர்பினையும் போராட்டங்களையும் இதன் மூலம் அடக்க முடியாது. இந்த தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்
— M A Sumanthiran (@MASumanthiran) April 1, 2022
We call upon #President @GotabayaR to immediately rescind this gazette notification. You cannot stifle protests and opposition to the regime by declaring a state of #emergency. I call upon fellow members of #Parliament not to approve this ill-advised move. https://t.co/NJCi4RNWrD
— M A Sumanthiran (@MASumanthiran) April 1, 2022