அனைத்து கட்சிகளையும் ஒன்றினைத்து காபந்து அரசாங்கமொன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.
இன்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், காபந்து அரசாங்கத்தை அமைப்பதன் ஊடாக எரிபொருள் மற்றும் மின் தடை பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமெனவும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இத்தீர்மானத்துக்கு இணங்கவில்லையாயின், அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் விலகுவார்கள் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.