இலங்கையின் நிலவரங்களை தொடர்ந்து அவதானித்து வருவதுடன், வன்முறைகள் வெடித்திருப்பதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கரிசனை கொண்டிருக்கிறோம் என ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாக இடம்பெற்ற மக்கள் போராட்டம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளார்.
We are monitoring developments and are concerned by reports of violence in #SriLanka. Calling for restraint from all groups.
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) April 1, 2022