மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படாது என சிரேஷ்ட பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதன்படி, தண்டனைச் சட்டம் மற்றும் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும், இந்த சம்பவத்தினால் 39 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய 53 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.