தீர்வை வரி செலுத்தாது நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 1.43 கிலோ கிராம் தங்கம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பிரான்ஸில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த 39 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமான நிலைய பொலிஸாரும், சுங்கப் பிரிவினரும் இணைந்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.