follow the truth

follow the truth

September, 20, 2024
Homeஉள்நாடுஎதிர்க்கட்சித் தலைவருக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவருக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பு

Published on

தற்போது நமது நாடு ஒரு இக்கட்டான கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதிலிருந்து நாட்டை மீள கட்டியெழுப்ப சர்வதேசத்தின் ஆதரவு தேவை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

இந்நெருக்கடி காரணமாக ஒட்டுமொத்த சமூகமும் பெரும் சிரமங்களை அனுபவித்து வருவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்த நிலையிலிருந்து நாட்டை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இனவாதம், மதவாதம் மற்றும் பிரிவினைவாதம் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து மனித உரிமைகளுக்காகவும் முன் நிற்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் பல நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச பலஸ்தீனம் தொடர்பாக கொண்டிருந்த நிலைப்பாட்டை தாம் பாராட்டுவதாகவும் மதிப்பதாகவும் பலஸ்தீனத் தூதுவர் Zuhair Zair இதன் போது தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஓமன் நாட்டுத் தூதுவர் H. E.Juma Alshihhi, குவைட் நாட்டுத் தூதுவர் H.E. Mr. Khalaf Bu Dhhair, இந்தோனோசிய நாட்டுத் தூதுவர் H.E. Mrs.Dewi Gustina Tobing, பாகிஸ்தான் நாட்டுத் தூதுவர் Umar Farooq Burki, துருக்கி நாட்டுத் தூதுவர் Demet Sekercioglu, பாலஸ்தீன நாட்டுத் தூதர் Zuhair Zair, மாலைதீவு நாட்டின் தூதுவர் Yang Thai Tan ஆகிய தூதுக்குழுவினர் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(30) மாலை சந்தித்தனர்.

இராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியீடு

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் இன்று (20)...

மொனராகலையில் பஸ் கவிழ்ந்து விபத்து – 17 பேர் வைத்தியசாலையில்

மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கும்புக்கனையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

பேலியகொட மெனிங் சந்தை மூடப்பட மாட்டாது

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட்டாலும் பேலியகொட மெனிங் சந்தை அடுத்த இரண்டு நாட்களுக்கு மூடப்படாது என பேலியகொட மத்திய மீன்...