நாட்டில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இன்று 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை 200,000 ரூபாவாகவும், 22 காரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 185,000 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், தங்கத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த விலைக்கு விற்பனை செய்வதற்கு தங்கம் இல்லை என்றும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
மேலும், வாடிக்கையாளர்களுக்கு தேவையாயின் அவர்கள் வழங்கும் தங்கத்தைக் கொண்டு மாத்திரம் தங்க நகைகளை தயாரிக்க முடியும் என்று கூறுகின்றனர்.