மரபணுவை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு இந்தியாவின் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
மூன்று டோஸ்களைக் கொண்ட ‘சைகோவ் டி’ (ZYCOV-D) கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களில் 66 சதவீதத்தினருக்கு, அறிகுறியை வெளிப்படுத்தும் நோயில் இருந்து பாதுகாப்பு கிடைத்துள்ளதாக கெடிலா ஹெல்த்கேர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு பயன்படுத்துவதற்காக தயாரிக்கப்பட்டுள்ள மரபணு முறையிலான சைகோவ்-டி கொரோனா தடுப்பூசிக்கு இந்திய மருந்துகள் ஒழுங்குறுத்துகை கழகம் அனுமதியளித்துள்ளது.
இதற்கிடையே, 12 வயதுக்கு மேற்பட்டோருக்காக, சைகோவ் – டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாதை சேர்ந்த சைடஸ் கேடிலா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
உலகிலேயே, கொரோனா வைரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட முதல், மரபணு தடுப்பூசி இதுவாகும்.
இந்த தடுப்பூசி மூன்று டோஸ்கள் செலுத்தப்படும். வருடத்திற்கு 100 மில்லியன் முதல் 120 மில்லியன் டோஸ்கள் தயாரிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக சைடஸ் கேடிலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட டி.என்.ஏ தடுப்பூசிகள் மனிதர்கள் மத்தியில் சிறப்பாக செயல்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.