15ஆவது ஐ.பி.எல். ரி-20 கிரிக்கெட் திருவிழா, பல கோடி இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஆரம்ப போட்டியில் நடப்பு சம்பியன் என்ற அந்தஸ்துடன் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு ரவீந்திர ஜடேஜாவும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஸ்ரேயஸ் ஐயரும் தலைமை தாங்கவுள்ளனர்.
இதுவரை இரு அணிகளும் 26 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் 17முறை சென்னை அணியும் எட்டு முறை கொல்கத்தா அணியும் வெற்றிபெற்றுள்ளன. இரு போட்டிக்கு முடிவு இல்லை.
மெகா ஏலத்திற்கு பிறகு புதிய வீரர்களை வரவேற்றுள்ள அணிகள், மிக உத்வேகத்துடன் இத்தொடரில் விளையாடவுள்ளன. அத்துடன் இம்முறை புதிதாக இரு அணிகளின் வருகையும் இரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.