லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, சகல விதமான பெற்றோல் வகைகளின் விலைகளும் 49 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் ஒன்றின் புதிய விற்பனை விலை 303 ரூபாவாகும்.
அத்துடன், ஒக்டென் 95 ரக பெற்றோல் ஒன்றின் புதிய விற்பனை விலை 332 ரூபாவாகும்.