பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் வரலாறு காணாத பணவீக்க சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலைமைக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், பதவி விலக இம்ரான் கான் மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான அறிவித்தலை பாராளுமன்ற செயலரிடம் எதிர்க்கட்சிகள் வழங்கின.
இந்நிலையில், இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறவிருந்த சூழலில், பாராளுமன்ற உறுப்பினரின் இறப்புக்கு அஞ்சலி தெரிவிக்கும் விதமாக எதிர்வரும் திங்கள்கிழமை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.