follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடுபிரதமரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை

பிரதமரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை

Published on

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அரசியல் பழிவாங்கல் நோக்கில் அரச மற்றும் பகுதியளவிலான அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வா நேற்று (24) அலரி மாளிகையில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

அதன்படி, இந்தக் குழுவின் அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பிரதமர் உடனடியாக தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் 2021 செப்டெம்பர் 07 ஆம் திகதி அமைச்சரவையால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க இந்த குழு 2021 செப்டெம்பர் 10 ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையில் நிறுவப்பட்ட இக்குழுவில் ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஷ, ஜனாதிபதி சட்டத்தரணி வி.கே சோக்சி, கணக்காளர் கே.எஸ்.சந்திரபால டி சில்வா, ஓய்வுபெற்ற அரச கணக்காளர் எச்.டி. வீரசிறி ஆகியோர் சக உறுப்பினர்களாக செயற்பட்டனர். அதன் குழு செயலாளராக பிரதமர் அலுவலகத்தின் சட்ட பணிப்பாளர் சட்டத்தரணி தக்ஷித தேவபுர செயற்பட்டார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் அரச மற்றும் பகுதியளவிலான அரச ஊழியர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்படும் செலவுகள், மனதளவில் மற்றும் சமூக மட்டத்திலான அவர்களது கஷ்டங்களை கருத்தில் கொண்டு உரிய நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவதே இதன் நோக்கமாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவு

நாட்டில் இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் 14 நாட்களில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு...

அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவை அதிகரிக்க அனுமதி

இவ்வாண்டு இறுதி வரை அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நலன்புரி கொடுப்பனவுக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. கௌரவ...

ஜனாதிபதி – சீன ஜனாதிபதி இடையே சந்திப்பு

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று(15) இடம்பெற்றுள்ளது. இந்த...