தேர்தல், வாக்களிப்பு முறைமை, சட்ட ஒழுங்கு மறுசீரமைப்பு தொடர்பில் தேவையான திருத்தங்களை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதியுடன் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவிற்கான பதவிக்காலம் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தெரிவுக்குழுவின் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டுள்ளதால், பதவிக்காலத்தை நீடிக்க தீர்மானித்ததாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.