நாவல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணத்தை கொள்ளையடித்தமை தொடர்பில் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள 27 மற்றும் 29 வயதான சந்தேகநபர்கள் இருவரும் கொழும் – 08 மற்றும் பொரளை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
நாவல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடந்த 18 ஆம் திகதி இரவு முச்சக்கர வண்டியில் சென்ற ஐவர் அங்கிருந்த ஊழியரை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்