நாட்டுக்கு தேவையான டொலரை பெற்றுக் கொள்வதற்கு மாணிக்ககல் கைத்தொழில் துறையிலுள்ள சகலருக்கும் அர்ப்பணிப்புச் செய்ய முடியுமென இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
அகழ்வு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கல்வி புலமை பரிசிலை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
எமது நாடு மாத்திரமல்ல முழு உலகமும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. டொலரை பெற்றுக் கொள்வதே இதற்குரிய தீர்வாக காணப்படுகின்றது என அவர் மேலும் கூறியுள்ளார்.
ஒரு பில்லியன் டொலருக்கும் கூடுதலான வருமானத்தை இத்துறையிலுள்ளவர்கள் திரட்டுகின்றனர். பல்வேறு முறைகள் மூலம் மாணிக்க கற்களின் பெறுமதி குறைக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்டுகின்றன. இவற்றிலிருந்து தவிர்ந்து கொண்டு எமது நாட்டுக்கு தேவையான டொலரை பெற்று தாருங்கள் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.