தமிழகத்தின் அரிச்சல்முனை கடல் பகுதிக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 6 இலங்கையர்களை இந்திய கடலோர காவற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆண் ஒருவர், இரண்டு பெண்கள், மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் இன்று அதிகாலை ஒரு மணியளவில் மன்னாரிலிருந்து தமிழகத்தின் தனுஷ்கோடிக்கு படகொன்றில் அரிச்சல்முனைக்கு சென்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், இந்தியாவிற்கு குடிபெயர எண்ணியதாக குறித்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளின் விசாரணைக்கு பின் அனுமதி இன்றி தமிழகத்துக்குள் நுழைந்ததால் குறித்த ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்த பொலிஸார் இராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.