follow the truth

follow the truth

November, 15, 2024
HomeTOP1இந்திய கடனுதவின் கீழ் 35,000 மெற்றிக் டொன் டீசல் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது

இந்திய கடனுதவின் கீழ் 35,000 மெற்றிக் டொன் டீசல் அடங்கிய கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது

Published on

இந்திய அரசாங்கத்தின் கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற முதலாவது டீசல் தொகையினை தாங்கிய கப்பல் நேற்றிரவு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

35,000 மெற்றிக் டொன், அளவிலான டீசல் அந்த கப்பலில் கொண்டுவரப்பட்டுள்ளதோடு, அதனை தரையிறக்கும் பணிகள் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சிய நிறுவன தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜென்ரல் எம்.ஆர் டப்ளியு டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த எரிபொருள் தொகையினை உடனடியாக ரயில் ஊடாக ஏனைய மாகாணங்களுக்கும் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதன்மூலம் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் உள்ள வரிசைகளில் வீழ்ச்சி ஏற்படும் என வலுசக்தி அமைச்சு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

அதேநேரம், மேலும் 2,000 மெற்றிக் டொன் அளவான டீசல் தாங்கிய கப்பல் எதிர்வரும் 2 தினங்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேவையானளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளதாகவும், அதனை கொழும்பு மற்றும் அதனை அண்மித்த நகரங்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 3,500 மெற்றிக் டொன் அளவிலான எரிபொருள் தாங்கிய கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது.

அதனை இன்றைய தினத்திற்குள் தரையிறக்கி மக்களுக்கு விநியோகிக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொதுத் தேர்தல் 2024 : நாடளாவிய ரீதியான பெறுபேறுகள்

நடந்து முடிந்த பொதுத் தேர்தல் 2024, நாடளாவிய ரீதியான பெறுபேறுகள் உட்பட தேசிய பட்டியல் ஆசனங்கள்

விருப்பு வாக்கு : வன்னி மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP)...

விருப்பு வாக்கு : யாழ்.மாவட்டம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தின் விருப்பு வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன. யாழ். மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி (NPP)...