2022ஆம் ஆண்டு ஆசிய கிண்ணம் இருபதுக்கு 20 கிரிக்கட் தொடரை இலங்கையில் நடத்துவதற்கு ஆசிய கிரிக்கட் பேரவை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, குறித்த தொடர் ஓகஸ்ட் 27ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 2022ல் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்று ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளது.
தகுதிச் சுற்றுப் போட்டி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் அணிகளுக்கும், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ளது.