follow the truth

follow the truth

November, 16, 2024
Homeஉள்நாடுஇந்தியா வழங்கிய கடனுக்கு எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை

இந்தியா வழங்கிய கடனுக்கு எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை

Published on

இந்தியா – இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்கியமைக்காக எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை என்று அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நேற்று (18) நாடு திருப்பிய அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ விமான நிலையத்தில். ஊடகவியலாளர்கள் மத்தியில் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த இந்த நிதியை 3 ஆண்டுகளுக்குப் பின்னர் தவணை அடிப்படையில் திருப்பிச் செலுத்துவது அவசியமாகும். ஜனாதிபதி நீண்டகால திட்டமிடலின் கீழ் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

இலங்கையுடன் அயல்நாடான இந்தியா தொடர்ந்தும் நெருக்கமாகச் செயற்படுகின்றது. இலங்கைக்குத் தேவையான பொருளாதார சமூக ஒத்துழைப்புக்களை நேரடியாக வழங்குவதாக இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

சேதனப் பசளை உற்பத்திக்காக இந்தியாவின் ‘நெனோ’ உர தட்டுப்பாடு நிலவினாலும் இலங்கைக்குப் போதியளவான உரத்தை வழங்க இந்தியப் பிரதமர் இணக்கம் தெரிவித்ததாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.

இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை விடுவித்து அவற்றை மக்களுக்கு நியாயமான விலையில் வழங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் இதன் போது வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே

அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை இன்று (16) ஏற்பாடு செய்து...

நாமல் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு

2024 பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தேசிய...

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அரசுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் வாழ்த்து

நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மையினை தக்க வைத்துக் கொண்டுள்ள புதிய அரசுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை...