ரயில் கட்டண திருத்தம் தொடர்பான அறிக்கை போக்குவரத்து அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கை, நேற்றைய தினம் தமக்கு கிடைத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த அறிக்கை தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டணங்கள் தொடர்பில் தீர்மானம் எட்டப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.