நீர் வழங்கும் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, தெஹிவளை-கல்கிஸை மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகள், இரத்மலானை, கொழும்பு 05, 06, பத்தரமுல்லை, பெலவத்த, உடுமுல்ல மற்றும் ஹிம்புத்தான ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் கொழும்பு 4 பிரதேசத்தில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.