சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு காரணமாக ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர், மூன்று மாதங்களில் சாரதி அனுமதிப்பத்திரம் வீட்டிற்கே அனுப்பப்படும் என போக்குவரத்து அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.