நாட்டில் வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
சனிக்கிழமை (19) மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணை
ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களும் 30 நிமிடமும் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை ஒருமணி நேரமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணிநேரம் 30 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது
மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை ஒருமணி நேரமும் 30 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஞாயிற்றுகிழமை (20) மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணை
ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்கள் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒருமணி நேரமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு மாலை 4.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரையான காலப்பகுதியினுள் 1 மணிநேரம் 30 நிமிடமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது