follow the truth

follow the truth

January, 18, 2025
Homeஉள்நாடுநீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கான அறிவுறுத்தல்.

நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கான அறிவுறுத்தல்.

Published on

கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் நீர் கட்டணப் பட்டியலைச் செலுத்தாத சகல நுகர்வோரினதும் நீர்விநியோகத்தைத் துண்டிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக, கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு, நீர்விநியோகத்தை துண்டிக்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.

கொரோனா பரவல் காலத்தில் தொடர்ச்சியாக நீர்விநியோக வழங்கலினால் 7.5 பில்லியன் ரூபாவை பாவனையாளர்களிடமிருந்து அறவிட வேண்டியிருப்பதாக வடிகாலமைப்புச் சபையின் மேலதிக முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்தார்.

அந்த நிலுவைப் பணத்தை அறவிடுவதற்கு பல முறை அறிவித்தல்கள் விடுக்கப்பட்ட போதிலும் அதற்கு பாவனையாளர்கள் பலர் உரிய வகையில் பதிலளிக்க தவறிவிட்டனர். அதனடிப்படையிலேயே அவ்வாறனவர்களின் நீர்விநியோகத்தை துண்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக, ஆறு மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு தொடர்ச்சியாக நீர்க்கட்டணத்தை செலுத்தாத நுகர்வோருக்கு, நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய பொலிஸ் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானம்

புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றச் செயல்கள் மற்றும்...

சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

கடந்த வியாழக்கிழமை(16) காலை மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய தொடர்புடையவர்களை கைது...

ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி மின்கட்டணம் 20% குறைக்கப்படும்

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பரிந்துரையின்படி மின்சாரக் கட்டணம் 20% குறைக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இன்று...