follow the truth

follow the truth

April, 4, 2025
Homeவிளையாட்டுஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம்

ஆப்கானின் இளம் கால்பந்து வீரரும் விமானத்திலிருந்து வீழ்ந்து மரணம்

Published on

அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் இருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தான் தேசிய உதை பந்தாட்ட இளையோர் அணியின் வீரர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

காபூல் விமான நிலையத்தில் கடந்த திங்களன்று மீட்பு விமானம் ஒன்றில் தொற்றி ஏறிப் பயணிக்க முற்பட்ட சிலர் உயிரிழந்தமை தெரிந்ததே. விமானத்தின்கீழே சக்கரங்கள் இடையே-தரை யிறக்கும் கியர் பகுதியில்- ஏறி ஒளிந்து பயணிக்க முற்பட்ட மூவர் விமானம்மேலே கிளம்பிப் பறந்தபோது உடல் சிதறுண்டு தரையில் வீழ்ந்தனர் என்று கூறப்படுகிறது.

விமானத்தில் இருந்து உடல்கள் கீழே வீழ்கின்ற வீடியோக் காட்சிகள் சமூக ஊடகத் தளங்களில் வெளியாகி இருந் தன. அவ்வாறு வானிலிருந்து வீழ்ந்து உயிரிழந்தவர்களில் ஒருவரே இளம் வீரர் ஷாகி அன்வாரி என்பது உறுதிப்படுத்தப்பட் டுள்ளது.

ஆப்கானிஸ்தான் விளையாட்டு இயக்குநரகமும்(Sports Directorate) இந்தச் செய்தியை பின்னர் உறுதிப்படுத்தியது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘நோட் புக்’ கொண்டாட்டம் – திக்வேஷ் ரதிக்கு அபராதம்

லக்னோ, பஞ்சாப் அணிகள் மோதிய பிரிமியர் போட்டி லக்னோவில் இடம்பெற்றிருந்தது. இதில் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி...

குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று (02) இடம்பெற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர்...

களத்திலேயே உயிரிழந்த குத்துச்சண்டை வீரர்

ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின்போது, திடீரென வலிப்பு வந்து நைஜீரிய வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கானா...