பலசரக்கு ஏற்றுமதி மூலம் வரலாற்றில் அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் மாத்திரம் இதனூடாக 1,03,000 மில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 41 வீத அதிகரிப்பாகும்.
இதில் அதிகூடிய வருமானம் கறுவா மூலம் பெறப்பட்டுள்ளதுடன், 18, 814 மெட்ரிக் தொன் கறுவா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 45, 879 மில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளது.
மிளகு ஏற்றுமதி மூலம் 22,669 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் இலங்கை 62, 981 மெட்ரிக் தொன் பலசரக்கினை ஏற்றுமதி செய்துள்ளது.