ரஷ்யப் படைகள் முற்றுகையிட்ட மேரியோபோல் நகரத்தில், ஷெல் தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் தஞ்சம் புகுந்திருந்த அரங்கத்தில் ரஷ்ய படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
அரங்கில் ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
தங்கள் படைகள் பொதுமக்களை தாக்கவில்லை எனவும், இந்த தாக்குதலை தாங்கள் தொடுக்கவில்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.