ரஷ்யாவில் செய்தி நேரலையின் போது உக்ரைன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பதாகையுடன் வந்த செய்தியாளரை பொலிஸார் கைது செய்ததுள்ளனர்.
ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழியில் அந்த பதாகையில் எழுத்துக்கள் இடம்பெற்று இருந்தது .
அதில்,”போர் வேண்டாம். போரை நிறுத்துங்கள். பிரச்சாரத்தை நம்பாதீர்கள். உங்களிடம் பொய் சொல்கிறார்கள் ” என எழுதப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அரசுக்கு எதிராக செயல்பட்டதாக மொஸ்கோ நகர பொலிஸார் செய்தியாளரை கைது செய்துள்ளனர்.