follow the truth

follow the truth

December, 22, 2024
HomeTOP1குழந்தைகளுக்கு திரவபால் ஊட்டுவதற்கு பயன்படுத்தப்படும் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

குழந்தைகளுக்கு திரவபால் ஊட்டுவதற்கு பயன்படுத்தப்படும் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published on

குழந்தைகளுக்கு திரவபால் ஊட்டுவதற்கு பயன்படுத்தப்படும் தரமற்ற பிளாஸ்டிக் போத்தல்களை விற்பனை செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சர் லசந்த அழகியவண்ண அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாலிகார்பனேட்டினால் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையினால் அங்கீகரிக்கப்படாத போதிலும், அவ்வாறான பொருட்கள் சந்தையில் இருப்பதாகவும், அதற்கான வசதிகள் இலங்கை தொழில்நுட்ப நிறுவனத்திடம் இருப்பதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு திரவ உணவு வழங்குவதற்காக தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களை இறக்குமதி செய்ய பதினெட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் அந்த நிறுவனங்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்வதற்கு மாத்திரமே அனுமதிப்பார் எனவும், பதிவு செய்யப்படாத நிறுவனங்களின் உற்பத்திகளின் மாதிரிகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதியாளர்களுக்கான விசேட அறிவித்தல்

இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள்,...

கசுன் மஹேந்திரவை கைது செய்தமை குறித்து பொலிசாரின் நிலைப்பாடு

மறைந்த ஜெக்சன் அன்டனியின் மகளின் கணவர் கசுன் மஹேந்திர ஹீனடிகல பொலிஸாரால் கைது செய்தமை தற்போதுள்ள சட்டங்களை மீறி...

கடந்த ஆண்டு, பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்களிப்பு மேல் மாகாணத்தில்..

2023 ஆம் ஆண்டில் இலங்கையின் பெயரளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு மேல் மாகாணத்தினால் அதிகூடிய பங்களிப்பை வழங்க முடிந்துள்ளதாக...