follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉள்நாடுஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

Published on

டீசல் விநியோகத்தினால் கூட்டுத்தாபனம் எதிர்க்கொள்ளும் நட்டத்தை ஈடுசெய்ய வேண்டுமாயின் ஒரு லீற்றர் டீசலின் விற்பனை விலையை 120 ரூபாவால் அதிகரிக்க வேண்டும்.

இருப்பினும்நெருக்கடியான சூழ்நிலையிலேயே தற்போது ஒரு லீற்றரின் விலை 55 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துமாறு வலுசக்தி அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்தார்.

எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர்மேலும் குறிப்பிடுகையில்,

விருப்பமில்லாத நிலையில் தான் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்தது.ஐ.ஓ.சி நிறுவனம் இவ்வருடத்தில்மாத்திரம் மூன்று முறை எரிபொருளின் விலையை அதிகரித்தது.

எரிபொருள் இறக்குமதி நெருக்கடி மறுபுறம் சிபெட்கோ எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட அதிகரித்த கேள்வி ஆகியவற்றை கருத்திற்கொண்டு எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டது.

ஒரு லீற்றர் டீசல் விநியோகத்தின் ஊடாக 120 ரூபா நட்டத்தை எதிர்க்கொள்கிறோம்.தற்போது 55 ருபாவினால் தான் டீசலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

டீசல் விநியோகத்தினால் ஏற்படும் நட்டத்தை ஈடு செய்ய வேண்டுமாயின் ஒரு லீற்றர் டீசலின் விலையை 120 ரூபாவால் மேலும் அதிகரிக்க வேண்டும்.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை எம்மால் நன்கு உணர முடிகிறது.

விலை அதிகரிக்காமல் பழைய விலைக்கமைய எரிபொருளை விநியோகித்தால் கூட்டுத்தாபனம் ஒவ்வொரு மாதமும் 2,600 கோடி நட்டத்தை எதிர்க்கொண்டிருக்க வேண்டும்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கும் போதும்,விலை குறைவடையும் போது தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையினை மறுசீரமைக்க எரிபொருள் விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்துமாறு வலுசக்தி அமைச்சிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக்...

இலங்கை இன்னும் பொருளாதார ஆபத்திலிருந்து முழுமையாக மீளவில்லை – தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

இலங்கை இதுவரை பயணித்த பாதையில் பல முன்னேற்றங்களை அடைந்துள்ளது. ஆனாலும் நாடு இன்னும் பொருளாதார ஆபத்தில் இருந்து மீளவில்லை...

தண்டனை – குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை ஒப்புதல்

அனைத்து வகையான உடல் ரீதியான தண்டனைகளை கட்டுப்படுத்தும் வகையில் தண்டனை மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான...