பயங்கரவாதத் தடை திருத்த சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக் குழு இணக்கம் தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலம் பெப்ரவரி 10ஆம் திகதி முதல் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதனை அடுத்து உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு அமைவாக திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலம், அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் அங்கீகரிக்கப்பட்டது.
இந்நிலையில் எதிர்வரும் வாரத்தில் இரண்டாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.