குறித்த அகழ்வாராய்ச்சிகளால் பாரியளவில் சுற்றாடலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாகத் தெரிவிக்கப்படும் அறிக்கைகளே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.
அகழ்வுப் பணிகளினால் அம்பலாந்தோட்டை – வலேவத்தை கிராமம் முற்றாக அழிவடைந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.அத்துடன், விவசாயம் செய்யக்கூடிய வயல் நிலங்களும் பொருளாதார ரீதியில் பயன்தரக்கூடிய தென்னை போன்ற பயிரிடப்பட்ட நிலங்களும் அழிந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.
இதன் காரணமாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் விசேட குழுவொன்றை நியமித்து, விரிவான விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தெரிவித்தார்.
அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.