கடந்த 3 நாட்களுக்குள் ஒரு டன் இரும்பு கம்பியின் விலை 38,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
முன்னர் 254,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் இரும்பு கம்பியின் விலை தற்போது 292,500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதற்கமைய 10 மில்லிமீற்றர் இரும்பு கம்பி ஒன்று 1,040 ரூபாவுக்கும், 12 மில்லிமீற்றர் கம்பி 1,500 ரூபாவுக்கும், 16 மில்லிமீற்றர் கம்பி ஒன்று 1,725 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.