follow the truth

follow the truth

January, 5, 2025
Homeஉலகம்தாம் களமிறங்கினால் மூன்றாம் உலகப்போர் நிகழும் - அமெரிக்கா எச்சரிக்கை

தாம் களமிறங்கினால் மூன்றாம் உலகப்போர் நிகழும் – அமெரிக்கா எச்சரிக்கை

Published on

உக்ரைன் போரில், ரஷ்ய படைகளுக்கு எதிராக அமெரிக்க படைகள் போரிடுமாயின், அது மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

ஆகவே உக்ரைனில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமது நாடு நேரடியாக தலையிடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் அமெரிக்காவின் உயிரியல் ஆயுதங்கள் கையாளப்படுவதாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ரஷ்யா குற்றம் சாட்டிய நிலையில், ஜோ பைடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ஒன்றுபட்ட நேட்டோவின் முழு பலத்துடன் பாதுகாப்போம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆகவே உக்ரைனில் இருந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட மாட்டோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறினார்.

நேட்டோவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி மோதல், மூன்றாம் உலகப் போரைக் குறிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடும் பனிப்புயல் – நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மோதிய 100 வாகனங்கள்

கஸகஸ்தான் நாட்டில் மோசமான வானிலை மற்றும் திடீரென ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக கிட்டத்தட்ட 100 வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச...

புதிய வைரஸ் பரவல் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை – சீனா அறிவித்தல்

புதிய வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் குளிர்காலத்தில் ஏற்படும் தொற்று என்றும் சீன அரசு...

சீனாவில் வேகமாகப் பரவும் புதிய வைரஸ்

உலகையே உலுக்கிய கொவிட்-19 தொற்று சீனாவில் பரவிய 5 வருடங்களுக்கு பின்னர் தற்போது மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV)...