follow the truth

follow the truth

January, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கை பொருளாதார நிலை: மத்திய வங்கி ஆளுநரின் அறிக்கை

இலங்கை பொருளாதார நிலை: மத்திய வங்கி ஆளுநரின் அறிக்கை

Published on

ரூபாவுக்கு அதிகமாக நெகிழ்வுத் தன்மையை வழங்குவதன் மூலம் குறுகிய கால பொருளாதார சிக்கல் ஏற்பட்டாலும் நிலையான பொருளாதார மொன்றை கட்டியெழுப்ப இந்த வழிமுறை பாரிய அளவில் கைகொடுக்குமென மத்திய வங்கி ஆளுநர் அஜிட்நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவை நெகிழ்வுத் தன்மை மிக்கதாக மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். வட்டி வீதத்தை அதிகரிக்கவும் தீர்மானித்துள்ளோம். இதன் மூலம் மக்களின் வாழ்வியலுக்கு பாதிப்பு ஏற்படுமென எமக்கு தெரியும். எனினும் நீண்டகால ஸ்த்திரதன்மையை பாதுகாக்கும் வகையிலேயே மத்திய வங்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜிட்நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ரூபாவின் பெறுமதியையும் பாதுகாக்க முடியும். இதன் ஊடாக நலன்புரி விடயங்கள் பலவும் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளது. அத்துடன் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் அந்நிய செலாவணியும் அதிகரிக்கலாம். இவற்றை கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் இந்த தீர்மானம் காரணமாக ஏற்படும் சவால்களுக்கு மாற்று தீர்மானங்களை எடுக்கவும் மத்திய வங்கி தயாராகவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் அஜிட்நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்று (17)...

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம்

பெண் நாடாளுமன்ற ஊழியர்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக...

கவுன் பிரச்சினைக்கு பரீட்சைத் திணைக்களத்தினால் தீர்வு

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு ஆசிரியைகள் சிலர் கவுன் அணிந்து வந்த சம்பவத்தால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்க்க...